#htmlcaption1 Go UP! Pure Javascript. No jQuery. No flash. #htmlcaption2 Stay Connected

Friday, March 28, 2014

எலி Eli – A Sexy Tale - தமிழ் குறும்படம்


இப்போது எல்லாம் பெரிய மாஸ் ஹீரோக்கள் , பிரபலமான இயக்குனர்களின் படங்களை பார்க்கவே பிடிப்பதும் இல்லை. சலிப்பும் வருகின்றது. ஒரே மாதிரியான கதைகள் அலுப்பூட்டும்  திரைக்கதை, ஹீரோக்களின் வீர பிரதாபங்களையே சுற்றி சுற்றி படம் எடுப்பதால் பார்பதற்கு ஆர்வமும் ஏற்படுவது இல்லை. ஆனால் தற்போது சில குறும்பட இயக்ககுனர்கள்,  புதிய இயக்குனர்களின் படங்கள் மற்றும் குறும்படங்கள்  பார்க்கும் ஆவலை ஏற்ப்படுத்துவதோடு அதிக அளவு ரசிக்க வைக்க கூடியதாகவும் உள்ளது.

நேரம் படம் மூலம் ரசிக்க வாய்த்த இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனின் சமீபத்திய குறும் படம் "எலி Eli – A Sexy Tale" என்ற குறும்படத்தை பார்த்தேன். மிகவும் ரசிக்க வைத்தது. கிட்ட தட்ட நேரம் பட அணியுடனே களம் இறங்கி 15 நிமிடங்களில் ஒரு அசத்தல் கதையை  சொல்லியமை திறமையானது. நேரம் படத்தில் நடித்த ஹீரோ நிவின், வில்லன் சிம்ஹா ஆகியோர் இதிலும் நடித்து உள்ளனர். ஒளிப்பதிவு இசை எடிட்டிங் எல்லாமே நன்றாக உள்ளது . நீங்களும் படத்தை பார்த்து ரசியுங்கள் :)