#htmlcaption1 Go UP! Pure Javascript. No jQuery. No flash. #htmlcaption2 Stay Connected

Saturday, August 11, 2012

மீண்டு(ம்) வந்த யுவராஜ் சிங்கும் அதிஷ்டக்கார ரோஹிட் ஷர்மாவும்



இன்னும் இரு வாரங்களில் ஆரம்பிக்க உள்ள நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு  டெஸ்ட் மற்றும் இரண்டு இருபதுக்கு இருபது போட்டிகளுக்கும்  மற்றும் செப்டெம்பரில் நடைபெறவிருக்கும் 20/20 உலககிண்ண தொடருக்குமான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான  டெஸ்ட் போட்டிகளுக்கான அணி
டோனி (அணித்தலைவர்), விராட் கோலி (உபதலைவர்), சேவாக், கம்பீர், டெண்டுல்கார், விவிஎஸ் லக்ஸ்மன், செட்டிஷ்வர் புஜாரா, ரஹானே, சுரேஷ் ரெய்னா, அஷ்வின், ஜாகிர்கான், உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா, பிரக்ஜான் ஓஜா, பியுஷ் சாவ்லா.

ஏற்க்கனவே அந்நிய மண்ணில் தொடர்ந்து எட்டு டெஸ்ட் போட்டிகளில் ஏற்ப்பட்ட தோல்வியை நீக்க இந்த தொடரை வெற்றி கொள்ள இந்திய அணிக்கு அவசியம் ஆகிறது. எனினும் தற்போதைய நியூசிலாந்து அணியும் பெரிய வலுவான அணியாக தெரியவில்லை. ரோஸ் ரெய்லர், மார்டின் குப்டில், மக்கலம், கைல் மில்ஸ், டிம் சவுதி ஐ தவிர மற்றவர்கள் எல்லோரும் அநேகமாக புது முகங்கள் தான். அத்துடன் அண்மையில் மேற்க்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான  டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20/20 உட்பட அனைத்தையும் இழந்தும் குறிபிடத்த்கது. மேலும் போட்டிகள் இந்தியாவில் நடப்பதால் நியூசிலாந்து அணியை வீழ்த்துவது இந்திய அணிக்கு கடினமான விடயமாக இருக்க போவதில்லை. அதனால் பெறப்போகும் வெற்றியும் அவ்வளவு முக்கியத்துவம் வாயந்ததாக இருக்கா விட்டாலும் தொடர்ந்து இடம்பெறவிருக்கும் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களுக்கு ஒரு முன்னோட்டமாக இந்த வெற்றிகள் இந்திய அணிக்கு பயன்படலாம்.
 
ராவிட் இன் ஓய்வுக்கு பிறகு அந்த இடத்தினை நிரப்ப புஜாரா அல்லது பத்ரிநாத்தை விட்டால் வேறு ஒருவரையும் சேர்க்க முடியாது. எனவே புஜாரவின் வருகை ஏற்க் கூடியதே.  அதே போல அவுஸ்திரேலிய  தொடரில் எட்டு இன்னிங்க்ஸ் இல் வெறும் 155 ரன்கள் மட்டுமே எடுத்து சொதப்பிய சீனியர் பிளேயர் லக்ஸ்மன் க்கும் இது முக்கியத்துவம் வாயந்த தொடராக இருக்கும். அவரின் டெஸ்ட் அணி இருப்பினை இந்த தொடர் தீர்மானிக்கும். நிச்சயாமாக அவர் சொதப்பினால் அவரது இடத்தினை நிரப்ப ரஹானே அல்லது பத்ரிநாத் காத்து இருக்கின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


செட்டிஸ்வர் புஜாரா 

அதே வேளை டெஸ்ட் அணியில் ஆறாம் இடத்தில துடுப்பு எடுத்து ஆட current form ஐ வைத்து பார்க்கும் போது நிச்சயம் சுரேஷ் ரைனா வை விட விராட் கோலி தான் தேர்ந்து எடுக்க படுவார். அதே போல பந்து வீச்சில் பெரிய மாற்றம் இல்லை. எனினும் சாவ்லா வின் சேர்க்கை surprise ஆக உள்ளது. எனினும் அஷ்வின், ஓஜா இருக்கும் போது விளையாடும் அணியில் இருக்க வாய்ப்பு சாவ்லா க்கு கிடைக்குமா தெரியவில்லை.

20/20 க்கான அணி விபரம்
டோனி (அணித்தலைவர்), விராட் கோலி (உபதலைவர்), சேவாக், கம்பீர், யுவவராஜ் சிங், ரோஹிட் சர்மா , மனோஜ் திவாரி, இர்பான் பதான், சுரேஷ் ரெய்னா, அஷ்வின், ஜாகிர்கான், பாலாஜி, ஹர்பஜன், அசோக் டிண்டா, பியுஷ் சாவ்லா

நீண்ட நாள் நோய் வாய்ப்பட்டு இருந்த யுவராஜ் இன் மீள வருகை நிச்சயம் இந்திய அணிக்கு பலம் சேர்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை. நான்காம் இடத்தில துடுப்பு எடுத்து ஆட யுவராஜ் ஐ விட வேறு யாரையும் என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை. அதே போல நீண்ட நாட்களுக்கு பின்னர் ஹர்பஜனும் இடம் பெற்றுள்ளார்.அவரின் performance ஐ பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். ஏற்க்கனவே அஷ்வின் இருக்கும் போது இன்னும் ஒரு சுழல் பந்து வீச்சாளர் தேவை பட்டால் மாத்திரமே ஹர்பஜன் சிங் தேர்ந்து எடுக்கப்பட கூடிய வாய்ப்பு உள்ளதாக  நான்  நினைகின்றேன்.



தல இதை போல நிறைய எதிர்பார்க்கிறோம் உன்கிட்ட இருந்து


அதே போல பாட்டிங்கில் ரோஹிட் சர்மாவை மீண்டும் தேர்ந்து (?) எடுத்து இருக்கின்றார்கள். இலங்கை அணியுடன் நடைபெற்ற  ஐந்து ஒருநாள் போட்டிகளில் 37 பந்துகளுக்கு முகம் குடுத்து வெறும் 13 ஓட்டங்களையே எடுத்து இருந்தார். சாராசரி 7.4. அவுஸ்திரேலிய தொடரிலும் அவர் பெரிதாக சாதிக்கவில்லை. ரோஹிட்டை தேர்வு செய்வது தோனியின் கட்டாயத்தினாலா, அல்லது தேர்வுக்குழுவினரின் கட்டாயத்தினாலா அல்லது  இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் கட்டாயத்தினாலா என்று தெரியவில்லை. இருந்தாலும் இவ்வளவு மோசமாக விளையாடியும் விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் அதிக அளவு விமர்சிக்கப்பட்டும்  அணியில் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றார் என்றால் அவருக்கு உண்மையிலே உடம்பிலே பெரிய மச்சம் இருக்குன்னு தான் அர்த்தம்..(அட அவ்வளவு லக் ஆனவரு ன்னு சொன்னேன்ங்க)

20/20 க்கு அதிரடியாகக விளையாடும் 20/20 ஸ்பெசிலிஸ்ட்களான ராபின் உத்தப்பா அல்லது அம்பாடி ராயுடு அல்லது  சென்ற முறை ஐபிஎல் இல் கலக்கிய மன்தீப் சிங் போன்றவர்களை ரோஹிட் சர்மா க்கு பதிலாக தேர்ந்து எடுத்து இருகலாம். எனினும் ரோஹிட் சர்மா தான் திறமையான துடுப்பாட்ட வீரர் ஆயிட்டே...எப்படி அவரை விலக்க முடியும் (ஹி ஹி ஹி.)


அம்பாட்டி ராயுடு 

நிச்சயமாக இந்திய அணி தேர்வுக்குழுவினர் அதிரடி மாற்றங்களை எடுக்க வேண்டிய நேரம் இது. சரியாக விளையாடவிட்டால் அவர் என்னதான் பெரிய பிளேயர் ஆக இருந்தாலும் அவரை அணியில் இருந்து தூக்கக வேண்டும்.ஆபோது தான் வெற்றி பாதையில் செல்ல முடியும் இல்லாவிட்டால்  கடந்த இங்கிலாந்து அவுஸ்திரேலிய தொடர்களை போல படு தோல்விகளையே  சந்திக்க நேரிடும்.

No comments: