#htmlcaption1 Go UP! Pure Javascript. No jQuery. No flash. #htmlcaption2 Stay Connected

Tuesday, August 21, 2012

வி வி எஸ் லக்ஸ்மன் : ஒரு சிறப்பு பார்வை


வி வி எஸ் லக்ஸ்மன்  தனது ஓய்வினை சில தினங்களுக்கு முன்னர்  அனைத்து சர்வதேச போட்டிகளில் இருந்தும்மான தனது ஓய்வினை அறிவித்து இருக்கின்றமை மூலம் இந்திய அணியும்  கிரிக்கெட் உலகமும் சிறந்த கிரிக்கெட் வீரர் ஒருவரை இழக்க நேரிடுகின்றது. 2011 இல் நடை பெற்ற இங்கிலாந்து அணியுடனா டெஸ்ட் தொடரிலும் 2012 இல் நடை பெற்ற அவுஸ்திரேலிய அணியுடன் ஆனா டெஸ்ட் தொடரிலும் சிறப்பாக விளையாடாமல் போன லக்ஸ்மன் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிப்பத்ற்க்கு ஆகவும், ஒய்வு பெற இதுவே சரியான தருணம் என்பதாலும் இந்த முடிவை எடுத்ததாக அறிவித்துள்ளார். அத்துடன் தனது இருப்பு இளம் வீரர்களுக்கு தடையாக இருக்க கூடாது என்றும் தனது இருப்பினால் இளம் வீரர்களின் வருகைக்கு தடையாக இருப்பதனை பற்றி விமர்சனம் எழுவதையும் தவிர்க்கவுமே இந்த முடிவினை எடுத்ததாக கூறியுள்ளார். அதாவது ரசிகர்களின் எதிர்மறை விமர்சனம் லக்ஸ்மனின் ஓய்வுக்கு ஒரு காரணமாக அமைந்தது சிறிது வருத்தமாகவே உள்ளது.




நன்றாக அவதானித்து இருந்திருந்தால் தெரிந்து இருக்கும் கடந்த 12 வருடங்களில் (2000-2012) இந்திய டெஸ்ட் அணியில்  ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களும் 7 ஆம் இலக்க வீரருமே மாறிக்கொண்டு இருப்பார்கள் அல்லது மாற்றப்பட்டு கொண்டு இருப்பார்கள். ஆனால் கிட்டத்தட்ட 12 வருடங்கள் இந்திய டெஸ்ட் அணியில் 3 ஆம் 4 ஆம்  5ஆம்  6ஆம் இடங்களுக்கு வேறு வீரர்களுக்கு தேவையே இல்லாமல் போனது. காரணம் 3 ஆம் இடத்தில் ராவிட்டும்  4 ஆம் இடத்தில்  சச்சினும் 5 ஆம் இடத்தில்  கங்குலியும் 6 ஆம் இடத்தில் லக்ஸ்மனும் சிறப்பாக விளையாடிகொண்டு இருந்ததால்  அந்த இடங்களுக்கு வேறு எவருமே தேவையாய் இருக்கவில்லை. இதுவே லக்ஸ்மனின் திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டு. உண்மையிலே லக்ஸ்மனும் டிராவிட், சச்சின், கங்குலிக்கு இணையான சிறந்த துடுப்பாட்டவீரர் தான். இருந்தாலும் லக்ஸ்மன் எப்போதும் குறைத்து மதிப்பிடப்பட்டே (under estimated or under rated ) வந்து இருக்கின்றார் என்ற வருத்தம் எனக்கு உண்டு.

37 வயதான லக்ஸ்மன் 134 டெஸ்ட் போட்டிகளில் பங்கு பற்றி 17 சதங்கள் 56 அரைசதங்கள் உடன் 45.97 என்ற சராசரியில் 8781 ஓட்டங்களை பெற்றுள்ளார். அதே போல 86 ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் பங்கு பற்றி 6 சதங்கள் 10 அரைசதங்கள் உடன் 30.76 என்ற சராசரியில் 2338 ஓட்டங்களை பெற்றுள்ளார். அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறப்பாக துடுப்பு எடுத்து ஆடும லக்ஸ்மன் பெற்ற 17 டெஸ்ட் சதங்களில் 6 னையும்  ஆறு ஒரு நாள் சர்வதேச சதங்களில் நான்கினையும்  அவுஸ்திரேலிய அணிக்கு எதிராகவே பெற்று இருந்தார்.

Very Very Special லக்ஸ்மன் என அவருடைய முதல் எழுத்துகளாலேயே கிரிக்கெட் வர்ணனையாளர்களால் செல்லமாக அழைக்கப்படும் அவர் தனது முதல் டெஸ்ட் போட்டியை 1996 இல் அகமதாபாத் இல் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக மேற்கொண்டார். அந்த போட்டியில் இரண்டாம் இன்னிங்க்ஸ் இல் அவர் பெற்ற 51 ஓட்டங்கள் அணியின் வெற்றிக்கு வழி வகுத்தது. அந்த போட்டியின் முழுமையான ஸ்கோர் விபரம் 

அதே போல 1998 இல் கட்டாக் இல் ஜிம்பாவே அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகம் ஆனார். எனினும் அந்த போட்டியில் எந்த வித ஓட்டங்களையும் பெறாமல் ஆட்டம் இழந்தார்.

இப்படியாக அணிக்குள் வருவதும் போவதும் ஆக இருந்த லக்ஸ்மன் அவருடைய career தொடக்கத்தில் சற்று தடுமாறியே வந்தார். எனினும் 2000 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாக்கு எதிராக சிட்னி மைதானத்தில்  தனது முதல் சத்தினை பெற்றார் (167 ஓட்டங்கள்). அதற்க்கு பின்னால் எல்லாம் அவருக்கு ஏறுமுகம் தான்.

முக்கியமாக தொடர்ந்து வெற்றிகளாக குவித்து வந்த ஸ்டீவ் வாஹ் தலைமையிலான அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் வெற்றியில் லக்ஸ்மனின் பங்களிப்பு அபராமனது. 2001 இல் நடைபெற்ற இந்த தொடரில் ஏற்க்கனவே முதல் போட்டியை தோல்வியுற்று இருந்த கங்குலி தலமையிலான இந்திய அணி கொல்கத்தாவில்  நடைபெற்ற இந்த போட்டியிலும் இரண்டாம் இன்னிங்க்ஸ் இல் அவுஸ்திரேலிய அணியினால் follow on கொடுக்கப்பட்டு இரண்டாம் இன்னிங்க்ஸ் இலும் தடுமாறிக்கொண்டு இருந்த இந்திய அணிக்கு ட்ராவிட்டுடன் இணைந்து லக்ஸ்மன் கைகொடுத்தார். இருவரும் புரிந்த இணைப்பாட்டம் (376 ஓட்டங்கள்) ஆனது இந்திய அணியின் வெற்றிக்கும் அந்த தொடரினை கைப்பற்றவும் வழி வகுத்ததுடன்அவுஸ்திரேலிய அணியின் தொடர் வெற்றியினை (16 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து வெற்றி) தடுக்கவும் முடிந்தது. அந்த போட்டியில் டிராவிட் 180 ஓட்டங்களையும் லக்ஸ்மன் 281 ஓட்டங்களையும் பெற்றனர்.



மறக்க முடியாத இணைப்பாட்டம்

போட்டியின் பின்னர் கருத்து தெரிவித்து இருந்த ஷேன் வார்ன் “ தான் மோசமாக பந்து வீசவில்லை என்றும் எனினும் லக்ஸ்மனின் துடுப்பாட்டம் மிகவும் சிறந்ததாக இருந்தமையாலே தங்கள் அணி தோற்றதாகவும் தெரிவித்து இருந்தார். லக்ஸ்மனின் திறமைக்கு இதுவும் ஒரு சான்றாகும். அந்த போட்டியின் ஸ்கோர் விபரம்

லக்ஸ்மன் பெற்ற இந்த ஓட்டங்கள் அப்போது இந்தியர் ஒருவரினால் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்களாக மாறியது. பின்னர் அது சேவாக் பெற்ற முச்சதத்தின் மூலம் முறியடிக்கப்பட்டது. அதே போல டெஸ்ட் தொடருக்கு பிறகு நடைபெற்ற அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் ஐந்தாவது போட்டியில் தனது முதல் சத்தினை பெற்றார். எனினும்  இந்திய அணி அந்த தொடரை இழக்க நேரிட்டது.

அதே போல பல போட்டிகளில் லக்ஸ்மன் தனது திறமையான துடுப்பாட்டாத்தினால் இந்திய அணியின் வெற்றிகளுக்கு வழி வகுத்தார். அவை எல்லாவற்றயும் பற்றி எழுதினால் பதிவு நீண்டு கொண்டே போகும் என்பதால் முக்கியமான சில இன்னிங்க்ஸ்களை பற்றி சொல்கின்றேன்.

2003/2004 பருவ காலத்தில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவாது போட்டியின் போது ராவிட்டுடன் இணைந்து 5 ஆவது விக்கெட்டுக்கு பெற்ற 303  ஓட்ட இணைப்பாட்டம் அந்த போட்டியில் இந்திய அணியை வெற்றி பெற வைத்தது. ஸ்கோர் விபரம்
அதே போல நான்காவது போட்டியில் சச்சின் உடன் இணைந்து 4 ஆவது விக்கெட்டுக்கு பெற்ற 356  ஓட்ட இணைப்பாட்டம் அந்த போட்டியையும் தொடரையும் சமப்படுத்த உதவி செய்தது.  ஸ்கோர் விபரம்

2004 ஆம் ஆண்டு பாக்கிஸ்தான் அணியுடன் அதன் சொந்த மண்ணில் இந்திய அணி ஒரு தொடரை விளையாடியது. முதலில் நடந்த நான்கு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் இரு அணிகளும் தலா இரு போட்டிகளில் வெற்றி பெற்று தொடர் சம நிலையில் இருந்தது. தொடரை தீர்மானிக்கும் ஐந்தாவது போட்டியில் லக்ஸ்மன் பெற்ற சதம் இந்திய அணி தொடரை வெற்றி பெற உதவியது ஸ்கோர் விபரம்

2007/2008 பருவ காலத்தில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின் போது லக்ஸ்மன் இரண்டாம் இன்னிங்க்ஸ் இல் பெற்ற 79 ஓட்டங்கள் இந்திய அணியின் வெற்றிக்கு வழி வகுத்ததுடன் மீண்டும் ஒரு தடவை அவுஸ்திரேலிய அணியின் தொடர் வெற்றிகளுக்கு (16 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து வெற்றி) முற்று புள்ளி வைக்கப்பட்டது. ஸ்கோர் விபரம்


2008/2009 பருவ காலத்தில் இந்தியாவில் நடைபெற்ற அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின் போது லக்ஸ்மன் இரட்டை சத்தினை அடித்து இருந்தார். ஸ்கோர் விபரம்  

2009/2010 பருவ காலத்தில் இந்தியாவில் நடைபெற்ற அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியின் போது இந்திய அணிக்கு வெற்றி பெற இரண்டாம் இன்னிங்க்ஸ் இல் 216 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ஒரு கட்டத்தில் 124 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து தோல்வியின் விளிம்பில் இருந்த இந்திய அணிக்கு லக்ஸ்மன் இறுதி துடுப்பாட்ட வீரர்களின் உதவியுடன் சிறப்பாகக ஆடி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவினார். இஷாந்த் சர்மாவுடன் 9 ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களையும் இறுதி விக்கெட்டுக்காக பிரக்ஜன் ஒஜாவுடன் 11 ஓட்டங்களையும் பெற்ற லக்ஸ்மன் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் 73 ஓட்டங்களை பெற்று வெற்றிக்கு வழி வகுத்து இருந்தார். ஸ்கோர் விபரம் 

இவ்வாறாக பல போட்டிகளில் லக்ஸ்மனின் பங்களிப்பு அபாரமானது. இப்படியாக கனவான் தன்மை கொண்ட திறமையான துடுப்பாட்ட வீரர் ஒருவரின் ஒய்வு நிச்சயம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு கவலை அளிப்பதாக தான் இருக்கும். எனினும் அவரது எதிர்காலம் வளமானதாக இருக்க உங்களுடன் சேர்ந்து நானும் வாழ்த்துகின்றேன் ஒரு கிரிக்கெட் ரசிகனாக.வி வி எஸ் லக்ஸ்மனின் மேலும் சில சாதனைகள் தளத்தில் உள்ளது. அவற்றை பார்வையிட இங்கே கிளிக்குங்கள்.


பிரெண்ட்ஸ்...எங்க போறீங்க...அப்படியே மறக்காமல் உங்கள் விமர்சனங்களையும் ஓட்டுகளையும் போட்டு விட்டு போங்க...நன்றி. 

Saturday, August 11, 2012

மீண்டு(ம்) வந்த யுவராஜ் சிங்கும் அதிஷ்டக்கார ரோஹிட் ஷர்மாவும்



இன்னும் இரு வாரங்களில் ஆரம்பிக்க உள்ள நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு  டெஸ்ட் மற்றும் இரண்டு இருபதுக்கு இருபது போட்டிகளுக்கும்  மற்றும் செப்டெம்பரில் நடைபெறவிருக்கும் 20/20 உலககிண்ண தொடருக்குமான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான  டெஸ்ட் போட்டிகளுக்கான அணி
டோனி (அணித்தலைவர்), விராட் கோலி (உபதலைவர்), சேவாக், கம்பீர், டெண்டுல்கார், விவிஎஸ் லக்ஸ்மன், செட்டிஷ்வர் புஜாரா, ரஹானே, சுரேஷ் ரெய்னா, அஷ்வின், ஜாகிர்கான், உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா, பிரக்ஜான் ஓஜா, பியுஷ் சாவ்லா.

ஏற்க்கனவே அந்நிய மண்ணில் தொடர்ந்து எட்டு டெஸ்ட் போட்டிகளில் ஏற்ப்பட்ட தோல்வியை நீக்க இந்த தொடரை வெற்றி கொள்ள இந்திய அணிக்கு அவசியம் ஆகிறது. எனினும் தற்போதைய நியூசிலாந்து அணியும் பெரிய வலுவான அணியாக தெரியவில்லை. ரோஸ் ரெய்லர், மார்டின் குப்டில், மக்கலம், கைல் மில்ஸ், டிம் சவுதி ஐ தவிர மற்றவர்கள் எல்லோரும் அநேகமாக புது முகங்கள் தான். அத்துடன் அண்மையில் மேற்க்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான  டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20/20 உட்பட அனைத்தையும் இழந்தும் குறிபிடத்த்கது. மேலும் போட்டிகள் இந்தியாவில் நடப்பதால் நியூசிலாந்து அணியை வீழ்த்துவது இந்திய அணிக்கு கடினமான விடயமாக இருக்க போவதில்லை. அதனால் பெறப்போகும் வெற்றியும் அவ்வளவு முக்கியத்துவம் வாயந்ததாக இருக்கா விட்டாலும் தொடர்ந்து இடம்பெறவிருக்கும் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களுக்கு ஒரு முன்னோட்டமாக இந்த வெற்றிகள் இந்திய அணிக்கு பயன்படலாம்.
 
ராவிட் இன் ஓய்வுக்கு பிறகு அந்த இடத்தினை நிரப்ப புஜாரா அல்லது பத்ரிநாத்தை விட்டால் வேறு ஒருவரையும் சேர்க்க முடியாது. எனவே புஜாரவின் வருகை ஏற்க் கூடியதே.  அதே போல அவுஸ்திரேலிய  தொடரில் எட்டு இன்னிங்க்ஸ் இல் வெறும் 155 ரன்கள் மட்டுமே எடுத்து சொதப்பிய சீனியர் பிளேயர் லக்ஸ்மன் க்கும் இது முக்கியத்துவம் வாயந்த தொடராக இருக்கும். அவரின் டெஸ்ட் அணி இருப்பினை இந்த தொடர் தீர்மானிக்கும். நிச்சயாமாக அவர் சொதப்பினால் அவரது இடத்தினை நிரப்ப ரஹானே அல்லது பத்ரிநாத் காத்து இருக்கின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


செட்டிஸ்வர் புஜாரா 

அதே வேளை டெஸ்ட் அணியில் ஆறாம் இடத்தில துடுப்பு எடுத்து ஆட current form ஐ வைத்து பார்க்கும் போது நிச்சயம் சுரேஷ் ரைனா வை விட விராட் கோலி தான் தேர்ந்து எடுக்க படுவார். அதே போல பந்து வீச்சில் பெரிய மாற்றம் இல்லை. எனினும் சாவ்லா வின் சேர்க்கை surprise ஆக உள்ளது. எனினும் அஷ்வின், ஓஜா இருக்கும் போது விளையாடும் அணியில் இருக்க வாய்ப்பு சாவ்லா க்கு கிடைக்குமா தெரியவில்லை.

20/20 க்கான அணி விபரம்
டோனி (அணித்தலைவர்), விராட் கோலி (உபதலைவர்), சேவாக், கம்பீர், யுவவராஜ் சிங், ரோஹிட் சர்மா , மனோஜ் திவாரி, இர்பான் பதான், சுரேஷ் ரெய்னா, அஷ்வின், ஜாகிர்கான், பாலாஜி, ஹர்பஜன், அசோக் டிண்டா, பியுஷ் சாவ்லா

நீண்ட நாள் நோய் வாய்ப்பட்டு இருந்த யுவராஜ் இன் மீள வருகை நிச்சயம் இந்திய அணிக்கு பலம் சேர்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை. நான்காம் இடத்தில துடுப்பு எடுத்து ஆட யுவராஜ் ஐ விட வேறு யாரையும் என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை. அதே போல நீண்ட நாட்களுக்கு பின்னர் ஹர்பஜனும் இடம் பெற்றுள்ளார்.அவரின் performance ஐ பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். ஏற்க்கனவே அஷ்வின் இருக்கும் போது இன்னும் ஒரு சுழல் பந்து வீச்சாளர் தேவை பட்டால் மாத்திரமே ஹர்பஜன் சிங் தேர்ந்து எடுக்கப்பட கூடிய வாய்ப்பு உள்ளதாக  நான்  நினைகின்றேன்.



தல இதை போல நிறைய எதிர்பார்க்கிறோம் உன்கிட்ட இருந்து


அதே போல பாட்டிங்கில் ரோஹிட் சர்மாவை மீண்டும் தேர்ந்து (?) எடுத்து இருக்கின்றார்கள். இலங்கை அணியுடன் நடைபெற்ற  ஐந்து ஒருநாள் போட்டிகளில் 37 பந்துகளுக்கு முகம் குடுத்து வெறும் 13 ஓட்டங்களையே எடுத்து இருந்தார். சாராசரி 7.4. அவுஸ்திரேலிய தொடரிலும் அவர் பெரிதாக சாதிக்கவில்லை. ரோஹிட்டை தேர்வு செய்வது தோனியின் கட்டாயத்தினாலா, அல்லது தேர்வுக்குழுவினரின் கட்டாயத்தினாலா அல்லது  இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் கட்டாயத்தினாலா என்று தெரியவில்லை. இருந்தாலும் இவ்வளவு மோசமாக விளையாடியும் விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் அதிக அளவு விமர்சிக்கப்பட்டும்  அணியில் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றார் என்றால் அவருக்கு உண்மையிலே உடம்பிலே பெரிய மச்சம் இருக்குன்னு தான் அர்த்தம்..(அட அவ்வளவு லக் ஆனவரு ன்னு சொன்னேன்ங்க)

20/20 க்கு அதிரடியாகக விளையாடும் 20/20 ஸ்பெசிலிஸ்ட்களான ராபின் உத்தப்பா அல்லது அம்பாடி ராயுடு அல்லது  சென்ற முறை ஐபிஎல் இல் கலக்கிய மன்தீப் சிங் போன்றவர்களை ரோஹிட் சர்மா க்கு பதிலாக தேர்ந்து எடுத்து இருகலாம். எனினும் ரோஹிட் சர்மா தான் திறமையான துடுப்பாட்ட வீரர் ஆயிட்டே...எப்படி அவரை விலக்க முடியும் (ஹி ஹி ஹி.)


அம்பாட்டி ராயுடு 

நிச்சயமாக இந்திய அணி தேர்வுக்குழுவினர் அதிரடி மாற்றங்களை எடுக்க வேண்டிய நேரம் இது. சரியாக விளையாடவிட்டால் அவர் என்னதான் பெரிய பிளேயர் ஆக இருந்தாலும் அவரை அணியில் இருந்து தூக்கக வேண்டும்.ஆபோது தான் வெற்றி பாதையில் செல்ல முடியும் இல்லாவிட்டால்  கடந்த இங்கிலாந்து அவுஸ்திரேலிய தொடர்களை போல படு தோல்விகளையே  சந்திக்க நேரிடும்.

Saturday, August 4, 2012

ஆன்லைன் (Online) இல் ஆங்கில திரைப்படங்களை ஆங்கில உப தலைப்புகளுடன் (Subtitles) பார்ப்பதற்க்கு


பொதுவாக இணையத்தில் திரைப்படங்களை பார்க்க வேண்டும் என்றால் ஓன்று அவற்றினை டவுன் லோட் செய்து பார்க்க வேண்டும் அல்லது ஆன்லைன் இல் streaming method இல் பார்க்க வேண்டும். டவுன் லோட் செய்து பார்க்கும் முறையில் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி வரலாம். டவுன் லோட் ஆகுவதற்கு நீண்ட நேரம் எடுத்து உங்கள் பொறுமையை சோதிக்கும். அத்துடன் வேகமான இணைய இணைப்பு இருந்தாலே டவுன் லோட் பண்ணுவதும் சாத்தியாமாகும். டவுன் லோட் ஆகுவதற்கு நீண்ட நேரம் எடுப்பதால் திரைப்படத்தினை பார்க்க அதிக நேரம் காத்து இருக்க வேண்டும். அத்துடன் சில வேளைகளில் திரைப்படம் டவுன் லோட் ஆகி கொண்டு இருக்கும் போது சிலவேளைகளில் ஏதேனும் error/crash ஏற்ப்பட்டு டவுன்லோட் தடைப்படலாம்.

மேலும் சில தளங்களில் டவுன் லோட் பன்னுவதற்க்கு அல்லது  ஆன்லைன் இல் streaming method இல் பார்க்க அந்த தளத்தில் பதிவு செய்து கணக்கு வைத்து இருக்க வேண்டியதுடன் ஆன்லைன் இல் பணமும் செலுத்த வேண்டும்.

என்ன தான் ஆங்கில திரைப்படங்களை பார்த்தாலும் உப தலைப்புக்கள் (Subtitles) இல்லாமல் அவற்றை பார்த்து ரசிப்பது பலருக்கு கொஞ்சம் கஷ்டமான விடயாமகவே இருக்கும். இருந்தாலும் இணையத்தில் உபதலைப்புகளுடன் ஆங்கில படங்களை டவுன் லோட் பண்ணுவது உறுதிப்படுத்த முடியாமல் தான் இருக்கும். முழுமையாக படத்தினை டவுன் லோட் பண்ணியவுடன் தான் உபதலைப்புக்கள் இருக்கின்றதா என உறுதிப்படுத்த முடியும். நான் பல தடவைகள் இவ்வாறு படங்களை தரவிறக்கி உபதலைப்புக்கள் இல்லாமல் ஏமாந்து இருக்கின்றேன்.

இப்படியான குறைகளை போக்கி  ஆன்லைன இல் ஆங்கில திரைப்படங்களை ஆங்கில உப தலைப்புகளுடன் (Subtitles) பார்ப்பதற்க்கு என்றே ஒரு தளம் உள்ளது.

அந்த தளத்தின் முகவரி  www.watch32.com

பழைய திரைப்படங்களில் இருந்து அண்மையில் வெளிவந்த Dark knight rises, Ice age 4, Amazing Spider man என புதிய திரைப்படங்கள் வரை நீங்கள் இங்கே பார்த்து மகிழலாம். ஆனால் புதிய திரைப்படங்கள் கொஞ்சம் quality குறைவாக இருக்கும். 90 % ஆன படங்களுக்கு ஆங்கில உபதலைப்புகள் (Subtitles) உள்ளது இன்னும் ஒரு ப்ளஸ். அத்துடன் படங்களினை action, horror, rommance, family என வகைபடுத்தி வைத்துள்ளனர். எனவே  உங்களுக்கு பிடித்த movie category இல் சென்று உங்களுக்கு தேவையான படங்களை பார்க்கலாம்.

இனி என்ன...! அந்த தளத்துக்கு சென்று உங்களுக்கு தேவையான திரைப்படங்களை உபதலைப்புகளுடன் பார்த்து என்ஜாய் பண்ணுங்க...Guys!


அடுத்து வரும் பதிவுகள் ( இன்னும் சில தினங்களில்... எதிர்பாருங்கள்  )

  • விராட் கோலியின் வெற்றியும் ரோஹிட் சர்மாவின் சறுக்கலும் 
  • ஒரு நடிகனை எந்த அளவுக்கு ரசிக்கலாம்?