#htmlcaption1 Go UP! Pure Javascript. No jQuery. No flash. #htmlcaption2 Stay Connected

Saturday, October 15, 2011

சச்சின் டெண்டுல்கர் MEANS......?

சச்சின் டெண்டுல்கர் பற்றிய சுவாரசியமான விடயம் ஓன்று பேஸ்புக் இல எனது நண்பர்களால் பகிரப்பட்டு இருந்தது. அதை இங்கு தருகின்றேன். 2004 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற VB கிண்ண தொடரில் இடப்பெற்ற ஒரு போட்டியில் அவுஸ்திரேலிய சுழல் பந்து வீச்ச்சாளர் பிரட் ஹாக் சச்சின் டெண்டுல்காரை ஆட்டம் இழக்க செய்தார். அன்று போட்டி முடிவுற்ற பின்னர் ஹாக் சச்சின் இடம் ஆட்டம் இழக்க செய்த பந்தினை கொடுத்து அவரது ஆட்டோகிராப் ஐ கேட்டு இருக்கின்றார். சச்சின் உம் அதில் தனது கை எழுத்தையும் இட்டு இந்த வசனத்தையும் எழுதி கொடுத்தார்.



அது என்ன வசனம் தெரியுமா????
"IT WILL NEVER HAPPEN AGAIN!"

இந்த சம்பவத்துக்கு பிறகு 21 போட்டிகளில் ஹொக்கை சச்சின் எதிர் கொண்டு இருக்கின்றார்.அதில் எந்த போட்டியிலும் அவர் ஹோக் இன் பந்து வீச்சில் ஆட்டமிழக்கவில்லை.

இதுக்கு பெயர் தான் CONFIDENCE.

ஆகவே சச்சின் MEANS CONFIDENCE.

கடுப்பை கிளப்பும் தற்போதைய கிரிக்கெட்

சர்வதேச கிரிகெட்டில் இது மிக பரபரப்பான காலப்பகுதி. 2011 பருவ காலம் முடிந்து 2011/2012 பருவ காலம் தொடங்கி விட்ட நிலையில், தற்போது டெஸ்ட் அந்தஸ்து உள்ள நாடுகள் அனைத்தும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கு பற்றி வருகின்றன. தென்னாப்ரிக்கா அவுஸ்திரேலியா அணிகள தென்னாப்ரிக்காவிலும் ஜிம்பாப்வே, நியூசிலாந்து அணிகள் ஜிம்பாப்வேயிலும் வெஸ்ட் இண்டீஸ், பங்களாடேஷ் அணிகள் பங்களாதேஷிலும் பாகிஸ்தான் இலங்கை அணிகள் ஐக்கிய அரபு ராச்சியத்திலும் இங்கிலாந்து, இந்திய அணிகள் இந்தியாவிலும் தற்போது தொடர்களை விளையாடி வருகின்றன/உள்ளன.இதனை தொடர்ந்து இன்னும் சில முக்கிய தொடர்களும் இடம்பெறவுள்ளன.

தற்போது நடைபெறும் சிலபோட்டிகளில் இடம்பெற்ற கடுப்பை கிளப்பிய சம்பவங்களை இங்கே கூறுகின்றேன்.

தென்னாப்ரிக்கா அவுஸ்திரேலியா அணிகள விளையாடிய முதாலவது இருபதுக்கு இருபது போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இருந்தும் அன்றைய போட்டியில் விளையாடிய (ஆல்ரவுண்டர் என்று அழைக்கப்பட்டு வரும்!)ஸ்டீவ் ஸ்மித் என்ன காரணத்துக்கு ஆக அணிக்குள் தேர்ந்து எடுக்கப்பட்டார்(தொடர்ந்தும் வாய்ப்புக்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன)என்பது புரியாத மர்மமாகவே உள்ளது.அவரது பந்து வீச்சும் துடுப்பாட்டமும் சுமார் தான். அன்றைய போட்டியில் அவர் பந்து வீசவே இல்லை. பகுதி நேர பந்து வீச்ச்சாளர் டேவிட ஹஸ்ஸி 3 ஓவர்களும் முழு நேர சுழல் பந்து வீச்சாளர் ஸ்டீவ் ஒ கேபி ஒரு ஓவரும் பந்து வீசினார்கள். பின்னர் எதுக்கு ஸ்டீவ் ஸ்மித் அணியில்? ஸ்டீவ் சிமித்தை துடுப்பாட்டத்துக்கு தேர்ந்து எடுத்திருந்தார்கள் என்றால் அவரை விட பவர் ஹிட்டர்கள் நிறைய பேர் (உதாரணம் CULLAM FERGUSAN, AREON FINCH, ADAM VOGES) உள்ளனர்.அவர்களை தேர்ந்து எடுத்து இருக்கலாமே. அவுஸ்திரேலிய அணியை பொறுத்த வரையில் நான்கு பிரதான பந்து வீச்சாளர்கள் (3 வேக பந்து வீச்சாளர்கள் + 1 சுழல் வீச்சாளர்) உடனேயே களம இறங்க முடியும் எந்த போட்டிக்கும். ஐந்தாவது பந்து வீச்சாளராக
ஷேன் வாட்சன், டேவிட ஹஸ்ஸி, மைக்கல கிளார்க் போன்றாவர்களை வைத்து தாரளமாக சாமளிக்க முடியும். அதனை விடுத்து ஸ்டீவ் ஸ்மித் போன்றவர்களை தேர்ந்து எடுத்து ஒரு துடுப்பு ஆட்ட வீரரின் இடத்தையும் பறித்து எடுத்து, இது போதாது என்று டொம மூடி, இயன் ஹார்வி, பால் ரைபிள்,ஷேன் லீ,பிரெண்டன் ஜூலியன், அன்ரு சைமன் போன்ற சிறந்த ஆல்ரவுண்டர்கள் விளையாடிய அணியில் இவரையும் ஆல்ரவுண்டரர் என்று அழைத்து கடுப்பை கிளப்புறாங்க மை லார்ட்....



அடுத்த செம கடுப்பு இந்திய அணியில் பார்த்தீவ் பட்டேலின் தேர்வு. இந்திய அணிக்கு டோனி விக்கெட கீபிங் செய்யும் போது எதற்க்கு இரண்டாவது விக்கெட் கீப்பர்? அப்படியே இரண்டாவது விக்கெட் கீப்பர் ஆக தேர்வு அணிக்குள் இடம்பெற்று இருந்தாலும் விளையாடும் அணிக்குள் எதற்கு இடம் பெற்றார்?௦ பார்த்தீவ் பட்டேல் ஒன்றும் அதிரடியான சிறந்த துடுப்பாட்ட வீரர் அல்ல.அவரது பில்டிங் உம் மோசம.அது முதாலவது ஒரு நாள் போட்டியிலேயே தெரிந்தது.அவரை விட சிறந்த வீரர்கள் பலர் இருக்கும் போது தேர்வாளர்கள்
ஏன் இவரை மட்டும் தேர்ந்து எடுகின்றார்ககள்? ராபின் உத்தப்பா சாலஞ்சர் தொடரில் அதிரடி சதம் அடித்து கலக்கி இருந்தார். அதே போல சவுரப் திவாரி, அம்பாட்டி ராயுடு, மனோஜ் திவாரி போன்றவர்கள் இருக்கும் போது பார்த்தீவ் பட்டேல் தேவையா? இந்திய அணிக்கு தேவை அதிரடியான சிறந்த துடுப்பு ஆட்ட வீரர்களே தவிர பார்த்தீவ் பட்டேல் போன்ற சராசரி வீரர்கள் இல்லை.





அதே போல பந்து வீச்சில் 120-125 KMPH இல வீசும் வினய்குமார் இன் தெரிவும் புரியாத மர்மமே...வருண் அரோன் ஐ தேர்வு அணியில் மட்டுமே வைத்து கொண்டு விளையாடும் பதினொருவர் அணியில் இடம் பெற செய்யமாட்டார்கள் போல தெரிகின்றது. இந்திய அணிக்கு தற்போது தேவை 138-145 KMPH இல வீசும் பந்து வீச்சாளர்களே தவிர வினய்குமார் போல ஸ்லா மீடியம் பந்து வீச்சாளர்கள் அல்ல.

இனி வரும் காலங்களில் ஆவது அணித்தேர்வில் எல்லா நாடுகளும் மிகுந்த கவனம் செலுத்துவது நன்று.இல்லா விட்டால் போட்டிகளில் தோற்க வேண்டி நேரிடலாம்.



Friday, May 20, 2011

இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலமும் தேர்வுக்குழுவின் குளறுபடிகளும்


அடுத்த மாதம் இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுபயணம் செய்து விளையாடவுள்ளது. இந்திய அணி உலககிண்ணத்தை கைப்பற்றி உலக சாம்பியன் ஆன பின்னர் நடைபெறும் முதலாவது சர்வதேசத்தொடர் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் ஆவலாய் உள்ளனர். தற்போதைய நிலையில் கிரிக்கெட் உலகில் அவுஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் ஏறத்தாழ முடிவுக்கு கொண்டு வரப்பட்ட நிலையிலும் அவர்களால் மீண்டும் ஒரு ஆதிக்கசக்தியாக தற்போதைய நிலையில் தீடிரென மீண்டு எழுந்து வரமுடியாத நிலையிலும் கிரிக்கெட் உலகின் புதிய ஆதிக்க சக்தியாக எந்த அணி மாறும் என்பதில் கிரிகெட் ரசிகர்கள் ஆவலாய் உள்ளனர்.

இந்திய அணி அப்படி மாறுவதற்கு அணி வீரர்களின் திறமையான செயற்பாட்டில் மட்டும் அன்றி இந்திய அணியின் தேர்வாளர்களின் சரியான தேர்விலும் தங்கி உள்ளது.அவர்களின் தேர்வு வீரர்களின் திறமையின் அடிப்படையில் மட்டுமே அமைய வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி செய்வதாகவே தெரியவில்லை. அதற்கு மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுபயணம் செய்து விளையாடவுள்ள அணியே ஒரு உதாரணம். பல திறமையான வீரர்களுக்கு சந்தர்ப்பம் அளிக்கவில்லை. ஏறக்கனவே உலககிண்ணத்துக்கு தேர்வு செய்யப்பட்ட அணி பற்றியும் பல விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் உலககிண்ணத்தை வென்ற படியால் அவையு அடங்கி போயின.

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுபயணம் செய்து விளையாட தேர்ந்து எடுக்கப்பட்ட அணி:

Gautam Gambhir (captain), Suresh Raina (vice captain), Parthiv Patel (wk), Virat Kohli, Yuvraj Singh, S Badrinath, Rohit Sharma, Harbhajan Singh, R Ashwin, Praveen Kumar, Ishant Sharma, Munaf Patel, Vinay Kumar, Yusuf Pathan, Amit Mishra, Wriddhiman Saha (wk).

இந்திய அணி டெஸ்ட் போட்டி தர வரிசையில் ஏறக்கனவே முதலாவது இடத்தில இருந்தாலும் வெளிநாட்டு மண்ணில் வெற்றி பெறுமளவுக்கு வலுவானதாக உள்ளதா என்பது கொஞ்சம் சந்தேகமே. துடுப்பாட்ட வரிசை பலமாக இருந்தாலும் ஒரு போட்டியில் வெல்வதற்கு தேவையான எதிரணியின் இருபது விக்கெட்டுக்களை கைப்பற்றுவத்க்கான பந்துவீச்சாளர்கள் ஜாகீர் கானை தவிர வேறு எவருமே இல்லாமல் இருப்பது பெரிய பலவீனமே. இன்னும் எவ்வளவு காலத்துக்கு பந்துவீச்சில் ஜாகீர் கானை மட்டுமே நம்பி கொண்டு இருக்க போகின்றது இந்திய அணி? அவருக்கும் வயது ஏறிகொண்டே போகின்றது. தேர்வாளர்கள் திரும்ப திரும்ப விக்கெட் எடுக்க தெரியாத சிறிசாந்த், பிட்னெஸ் இல்லாத நெஹ்ரா, வினய் குமார், போன்றவர்களுக்கு சந்தர்ப்பம் அளிப்பதை தவிர்த்து அபிமன்யு மிதுன், தற்போது ஐபிஎல் இல் கலக்கும் இஷாந்த் ஷர்மா, வருண் எரோன் போன்றவர்களுக்கு சந்தர்ப்பம் அளிக்கலாம்.

அபிமன்யு மிதுன்


அதே போல ஒருநாள் போட்டிகளிலும் இந்தியாவின் முன்னணி சுழல் பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங்கும் விக்கெட் எடுக்கும் திறமை குறைந்து கொண்டே போகின்றது. நடந்து முடிந்த உலக கிண்ணத்தில் கூட ஹர்பஜன் சிங் 9 விக்கட்டுகளையே எடுத்து இருந்தார். (சராசரி 43.33) ஆனால் பகுதி நேர சுழல் பந்து வீச்சாளரான 15 விக்கேட்டுகளை யுவராஜ் சிங்க் எடுத்து இருந்தார் (சராசரி 25.13). ஆகவே அஸ்வினுக்கு தொடர்ச்சியாக சந்தர்ப்பம் வழங்குவது அவசியம். அதே போல இந்த ஐபிஎல் இல் கலக்கி கொண்டு இருக்கும் இரண்டு லெக் ஸ்பின்னர்கள் இக்பால் அப்துல்லா, ராகுல் சர்மா போன்றவர்களுக்கும் சந்தர்ப்பம் அளித்தல் நல்லது. டெஸ்ட் போட்டிகளில் அமித் மிஷ்ராவையோ ஒஜாவையோ இரண்டாவது சுழல் பந்துவீச்சாளாராக தேர்ந்து எடுக்கலாம்.

இக்பால் அப்துல்லா

ஒரு காலத்தில் நன்றாக துடுப்பாட்டமும் விக்கெட் கீப்பிங்கும் செய்ய தெரிந்த விக்கெட் காப்பாளர்கள் கிடைப்பது அரிதாகவே இந்திய அணிக்கு இருந்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை. டோனி க்கு பதிலாக விக்கெட் கீப்பிங்க்கில் ஈடுபட ரொபின் உத்தப்பா, அம்பாட்டி ராயுடு, நமன் ஓஜா போன்றவர்கள் இருக்கும்போது தெரிவளர்கள் திரும்ப திரும்ப பால் குடி மாறாத பார்த்திவ் பட்டேல் யும் விர்த்திமான் சகாவையும் தேர்ந்து எடுப்பது ஏனோ தெரியவில்லை. ரொபின் உத்தப்பா, அம்பாட்டி ராயுடு, போன்றவர்கள் விக்கெட் கீப்பிங்க்கில் மட்டும் அல்ல. அதிரடியாக துடுப்பு எடுத்தாடக்கூடியவர்களும் கூட.

இந்திய அணியின் டெஸ்ட் போட்டி துடுப்பாட்ட வரிசையை பொறுத்தவரையில் மூன்றாவது இடமான டிராவிட் இன் இடமும் எந்த ஒரு வீரருமே நிலையான இடத்தை பிடிக்காத ஆறாவது இடமும் தான் கொஞ்சம் பலவீனங்களாக உள்ளது. இந்த இடங்களுக்கு நிச்சயமாக புஜாரா, முரளி விஜய், பத்ரிநார்த், அபினவ் முகுந்த் (முதல் தர போட்டிகளில் சராசரி 55.51) போன்றவர்களை தேர்ந்து எடுக்கலாம். மிகவும் திறமையான ஒரு துடுப்பட்ட வீரரான பத்ரிநார்த்க்கு (முதல் தர போட்டிகளில் பத்ரியின் சராசரி 62.31) உண்மையிலேயே சந்தர்ப்பம் அளிக்கவேண்டும். அதே போல மற்றுமொரு திறமையான தமிழக வீரரான அபினவ் முகுந்தை எல்லாம் ஐபிஎல் போட்டிகளில் கூட ஒருவரும் கண்டுகொள்ளவில்லை என்பது நிச்சயம் வருத்தத்துக்கு உரியது.

அபினவ் முகுந்

ஒருநாள் துடுப்பாட்ட வரிசையை பொறுத்தவரை கண்ணை மூடிகொண்டு பொறுப்பு இல்லாமல் குருட்டு ஆட்டம் ஆடி ஆட்டமிழக்கும் யூசுப் பதானை நீக்கலாம். யூசுப் பதானை விட அதிரடியாகவும் அதேவேளை பொறுப்புணர்வுடனும் விளையாடும் சவ்ரவ் திவாரி, அம்பாட்டி ராயுடு, ரொபின் உத்தப்பா, மனோஜ் திவாரி தற்போது ஐபிஎல் இல் கலக்கும் போல் வல்தாட்டி போன்றவர்களுக்கு சந்தர்ப்பம் அளிக்கலாம். அதே வேளை எந்த நேரமும் சோம்பல் தனத்துடனும் ஏனோ தானோ என்றும் விளையாடும் ரோஹித்சர்மா போன்றவர்களை எடுப்பதால் எந்த உபயோகமும் இல்லை. இவருக்கு ஏகப்பட்ட சந்தர்பங்கள் வழங்கப்பட்டு விட்டது.

அத்துடன் வருடத்தின் அனைத்து நாட்களுமே கிரிக்கெட் என்றாகிவிட்டது இப்போது. இவ்வாறு தொடர்ச்சியாக கிரிக்கெட் விளையாடினால் வீரர்கள் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் மிகுந்த சோர்வு அடைவார்கள். அத்துடன் காயத்துக்கு உள்ளாகவும் நேரிடும். உடல் வலிமையை தக்க வைப்பதும் சிரமம். எனவே போட்டிகளை திட்டமிட்டு சீரான கால இடைவேளையில் நடத்தலாம். அப்படி தொடர்ச்சியாக போட்டிகளில் விளையாட வேண்டி வரின் வீரர்களை சில வீரர்களுக்கு ஒய்வு கொடுத்து சில புதிய வீரர்களை பயன்படுத்தும் சுழற்சி முறையை பயன்படுத்தலாம். இதனால் புதிய வீரர்களின் திறமையும் சோதனை செய்து பார்க்கலாம். இந்த வருடம் இந்திய அணிக்கு மிக முக்கியமான இங்கிலாந்து அவுஸ்திரேலிய சுற்று பயணங்களும் உண்டு. ஆகவே பிசிசிஐ யும் இந்திய அணி தேர்வுக்குழுவும் திட்டமிட்டு செய்ற்படுவது நன்று.