#htmlcaption1 Go UP! Pure Javascript. No jQuery. No flash. #htmlcaption2 Stay Connected

Saturday, July 27, 2013

புயல் மழை, இரவு நேரம், தனிமையான பங்களா, ஒரு இளம் பெண், ஒரு பூனை , இரு அந்நியர்கள்



ராம் கோபால் வர்மாவின் படங்களுக்கு நான் எப்போதுமே ரசிகன். ஒரே மாதிரியான மசாலா திரைபடங்களுக்கு அடிமையாகி கிடந்த இந்தி பட ரசிகர்களை தரமான classical படங்களையும் ரசிக்க வைத்தமைக்கான ஆரம்ப புள்ளியை இட்டவர். அதே போல தனியே ஹிந்தி திரைபட ரசிகர்களை குறி வைக்காமல் அனைத்து மொழி ரசிகர்களையும் திருப்தி படுத்தும் வகையில் படம் எடுப்பவர்.

ராம் கோபால் வர்மா வின் பேவரிட் ஏரியா  நிழல் உலக தாதாக்களை பற்றிய underworld gangsters படங்கள் ஆக இருந்தாலும் சீரியல் கில்லர், பேய் பற்றிய த்ரில்லர் படங்கள் எடுப்பதிலும் அவர் ஒரு தனித்திறமை வாய்ந்தவர்.

மூன்றே மூன்று காரெக்டர்ஸ்,ஒரு பூனை, ஒரு பெரிய பங்களா இவ்வளவையும் வைத்து கொண்டு ஒன்றரை மணி நேரத்தில் மிக குறைந்த செலவில்  ஒரு த்ரில்லர் / horror படத்தினை குடுக்க முடியுமா ? முடியும் என்று ராம்கோபால் வர்மா நீருபித்த படம் தான்  Kaun (தமிழில் யார் அங்கே என்று பொருள் படும்) 



புயல் மழை அடிக்கும் மோசமான இரவு நேரம். கொஞ்சம் தனிமையான ஏரியா, அங்கே ஒரு பெரிய பங்களா, தாய், தந்தை வெளியூர் சென்று விட அங்கே தனிமையில் பயத்தில் இருக்கும் ஒரு இளம் பெண். அந்த ஏரியாவில் ஒரு சீரியல் கில்லர் தனிமையில் இருக்கும் வீடுகளுக்குள் புகுந்து கொலை செய்வதாக டிவி யில் நியூஸ் சொல்ல்கிறது. அது அவளை மேலும் அச்ச பட வைகின்றது. இந்த வேளையில் இரு அந்நியர்கள் கொஞ்ச கொஞ்ச நேர இடைவெளிகளில் வீட்டுக்குள் அத்து மீறி நுழைகிறார்கள். அப்புறம் நடப்பது எல்லாமே திக் திக் என நெஞ்சை தட தடக்க வைக்கும் திரில்லர் கட்டங்கள்.  அவற்றை நீங்கள் படத்தை பார்த்தே தெரிந்து கொள்ளுங்கள். 

திரில்லர் படத்துக்கு தேவையான மிரட்டும் ஒளிப்பதிவும், இசையும் மேலும் படத்துக்கு பலம் குடுக்கின்றது. அதே போல மனோஜ் பாஜ்பாய், ஊர்மிளா வின் நடிப்பும் அசத்தல். மனோஜ் பாஜ்பாய் சும்மா அவருக்கே உரிய பாணியில் கலக்கி இருக்காரு. (படத்தை பார்த்தல் புரியும்.) இப்போது Gangster of wasseypur போன்ற அசத்தல் திரைபடங்களை எடுக்கும் அனுராக் கஷ்யப் இன் கதை தான் இது.  



அடுத்து  அடுத்து என்ன நடக்கும் என்று ரசிகர்கள் ஊகித்தபடி காட்சிகளை கொண்டு செல்லாமல் அவர்கள் ஊகிக்காதபடி காட்சிகளை கொண்டு செல்வதும் படத்தின் ஒவ்வொரு நிமிடமும் த்ரில்லிங் ஆக ரசிகர்களை கட்டி போட்டு வைத்து இருப்பதும் தான் உண்மையான நல்ல த்ரில்லர் படங்களுக்கு ஆனா தகுதி. இந்த தகுதிகள் நிச்சயமாக இந்த படத்திற்கு உண்டு

1999 ஆம் ஆண்டு இந்த படத்தினை சிறு வயதில் மிகுந்த பயத்துடன் பார்த்த அனுபவம் இருந்தது. அண்மையில் தான் மீண்டும் பார்த்தேன்  படத்தினை.

கண்டிப்பாக முதன் முதல் பார்பவர்கள் நிச்சயமாக அனுபவித்து பார்ப்பீர்கள். கண்டிப்பா படத்தை பார்த்து பயப்படுங்க...சாரி..என்ஜாய் பண்ணுங்க நண்பர்களே 

படத்தினை ஆங்கில உப தலைப்புகளுடன் பார்க்க இந்த லிங்க் க்கு செல்லுங்கள்.


படத்தை பற்றிய விவரம்

இயக்கம் :         ராம் கோபால் வர்மா

கதை:                 அனுராக் காஷ்யப்

நடிகர்கள்  :       ஊர்மிளா, மனோஜ் பாஜ்பாய், சுஷன்ட் சிங்

ஒளிப்பதிவு :    மாசார் கம்ரான்

இசை :                சந்தீப் சௌட்டா

ஆண்டு :            1999

மறக்காமல் உங்கள் வோட்களை செலுத்துங்கள்




 

No comments: