#htmlcaption1 Go UP! Pure Javascript. No jQuery. No flash. #htmlcaption2 Stay Connected

Tuesday, August 21, 2012

வி வி எஸ் லக்ஸ்மன் : ஒரு சிறப்பு பார்வை


வி வி எஸ் லக்ஸ்மன்  தனது ஓய்வினை சில தினங்களுக்கு முன்னர்  அனைத்து சர்வதேச போட்டிகளில் இருந்தும்மான தனது ஓய்வினை அறிவித்து இருக்கின்றமை மூலம் இந்திய அணியும்  கிரிக்கெட் உலகமும் சிறந்த கிரிக்கெட் வீரர் ஒருவரை இழக்க நேரிடுகின்றது. 2011 இல் நடை பெற்ற இங்கிலாந்து அணியுடனா டெஸ்ட் தொடரிலும் 2012 இல் நடை பெற்ற அவுஸ்திரேலிய அணியுடன் ஆனா டெஸ்ட் தொடரிலும் சிறப்பாக விளையாடாமல் போன லக்ஸ்மன் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிப்பத்ற்க்கு ஆகவும், ஒய்வு பெற இதுவே சரியான தருணம் என்பதாலும் இந்த முடிவை எடுத்ததாக அறிவித்துள்ளார். அத்துடன் தனது இருப்பு இளம் வீரர்களுக்கு தடையாக இருக்க கூடாது என்றும் தனது இருப்பினால் இளம் வீரர்களின் வருகைக்கு தடையாக இருப்பதனை பற்றி விமர்சனம் எழுவதையும் தவிர்க்கவுமே இந்த முடிவினை எடுத்ததாக கூறியுள்ளார். அதாவது ரசிகர்களின் எதிர்மறை விமர்சனம் லக்ஸ்மனின் ஓய்வுக்கு ஒரு காரணமாக அமைந்தது சிறிது வருத்தமாகவே உள்ளது.




நன்றாக அவதானித்து இருந்திருந்தால் தெரிந்து இருக்கும் கடந்த 12 வருடங்களில் (2000-2012) இந்திய டெஸ்ட் அணியில்  ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களும் 7 ஆம் இலக்க வீரருமே மாறிக்கொண்டு இருப்பார்கள் அல்லது மாற்றப்பட்டு கொண்டு இருப்பார்கள். ஆனால் கிட்டத்தட்ட 12 வருடங்கள் இந்திய டெஸ்ட் அணியில் 3 ஆம் 4 ஆம்  5ஆம்  6ஆம் இடங்களுக்கு வேறு வீரர்களுக்கு தேவையே இல்லாமல் போனது. காரணம் 3 ஆம் இடத்தில் ராவிட்டும்  4 ஆம் இடத்தில்  சச்சினும் 5 ஆம் இடத்தில்  கங்குலியும் 6 ஆம் இடத்தில் லக்ஸ்மனும் சிறப்பாக விளையாடிகொண்டு இருந்ததால்  அந்த இடங்களுக்கு வேறு எவருமே தேவையாய் இருக்கவில்லை. இதுவே லக்ஸ்மனின் திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டு. உண்மையிலே லக்ஸ்மனும் டிராவிட், சச்சின், கங்குலிக்கு இணையான சிறந்த துடுப்பாட்டவீரர் தான். இருந்தாலும் லக்ஸ்மன் எப்போதும் குறைத்து மதிப்பிடப்பட்டே (under estimated or under rated ) வந்து இருக்கின்றார் என்ற வருத்தம் எனக்கு உண்டு.

37 வயதான லக்ஸ்மன் 134 டெஸ்ட் போட்டிகளில் பங்கு பற்றி 17 சதங்கள் 56 அரைசதங்கள் உடன் 45.97 என்ற சராசரியில் 8781 ஓட்டங்களை பெற்றுள்ளார். அதே போல 86 ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் பங்கு பற்றி 6 சதங்கள் 10 அரைசதங்கள் உடன் 30.76 என்ற சராசரியில் 2338 ஓட்டங்களை பெற்றுள்ளார். அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறப்பாக துடுப்பு எடுத்து ஆடும லக்ஸ்மன் பெற்ற 17 டெஸ்ட் சதங்களில் 6 னையும்  ஆறு ஒரு நாள் சர்வதேச சதங்களில் நான்கினையும்  அவுஸ்திரேலிய அணிக்கு எதிராகவே பெற்று இருந்தார்.

Very Very Special லக்ஸ்மன் என அவருடைய முதல் எழுத்துகளாலேயே கிரிக்கெட் வர்ணனையாளர்களால் செல்லமாக அழைக்கப்படும் அவர் தனது முதல் டெஸ்ட் போட்டியை 1996 இல் அகமதாபாத் இல் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக மேற்கொண்டார். அந்த போட்டியில் இரண்டாம் இன்னிங்க்ஸ் இல் அவர் பெற்ற 51 ஓட்டங்கள் அணியின் வெற்றிக்கு வழி வகுத்தது. அந்த போட்டியின் முழுமையான ஸ்கோர் விபரம் 

அதே போல 1998 இல் கட்டாக் இல் ஜிம்பாவே அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகம் ஆனார். எனினும் அந்த போட்டியில் எந்த வித ஓட்டங்களையும் பெறாமல் ஆட்டம் இழந்தார்.

இப்படியாக அணிக்குள் வருவதும் போவதும் ஆக இருந்த லக்ஸ்மன் அவருடைய career தொடக்கத்தில் சற்று தடுமாறியே வந்தார். எனினும் 2000 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாக்கு எதிராக சிட்னி மைதானத்தில்  தனது முதல் சத்தினை பெற்றார் (167 ஓட்டங்கள்). அதற்க்கு பின்னால் எல்லாம் அவருக்கு ஏறுமுகம் தான்.

முக்கியமாக தொடர்ந்து வெற்றிகளாக குவித்து வந்த ஸ்டீவ் வாஹ் தலைமையிலான அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் வெற்றியில் லக்ஸ்மனின் பங்களிப்பு அபராமனது. 2001 இல் நடைபெற்ற இந்த தொடரில் ஏற்க்கனவே முதல் போட்டியை தோல்வியுற்று இருந்த கங்குலி தலமையிலான இந்திய அணி கொல்கத்தாவில்  நடைபெற்ற இந்த போட்டியிலும் இரண்டாம் இன்னிங்க்ஸ் இல் அவுஸ்திரேலிய அணியினால் follow on கொடுக்கப்பட்டு இரண்டாம் இன்னிங்க்ஸ் இலும் தடுமாறிக்கொண்டு இருந்த இந்திய அணிக்கு ட்ராவிட்டுடன் இணைந்து லக்ஸ்மன் கைகொடுத்தார். இருவரும் புரிந்த இணைப்பாட்டம் (376 ஓட்டங்கள்) ஆனது இந்திய அணியின் வெற்றிக்கும் அந்த தொடரினை கைப்பற்றவும் வழி வகுத்ததுடன்அவுஸ்திரேலிய அணியின் தொடர் வெற்றியினை (16 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து வெற்றி) தடுக்கவும் முடிந்தது. அந்த போட்டியில் டிராவிட் 180 ஓட்டங்களையும் லக்ஸ்மன் 281 ஓட்டங்களையும் பெற்றனர்.



மறக்க முடியாத இணைப்பாட்டம்

போட்டியின் பின்னர் கருத்து தெரிவித்து இருந்த ஷேன் வார்ன் “ தான் மோசமாக பந்து வீசவில்லை என்றும் எனினும் லக்ஸ்மனின் துடுப்பாட்டம் மிகவும் சிறந்ததாக இருந்தமையாலே தங்கள் அணி தோற்றதாகவும் தெரிவித்து இருந்தார். லக்ஸ்மனின் திறமைக்கு இதுவும் ஒரு சான்றாகும். அந்த போட்டியின் ஸ்கோர் விபரம்

லக்ஸ்மன் பெற்ற இந்த ஓட்டங்கள் அப்போது இந்தியர் ஒருவரினால் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்களாக மாறியது. பின்னர் அது சேவாக் பெற்ற முச்சதத்தின் மூலம் முறியடிக்கப்பட்டது. அதே போல டெஸ்ட் தொடருக்கு பிறகு நடைபெற்ற அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் ஐந்தாவது போட்டியில் தனது முதல் சத்தினை பெற்றார். எனினும்  இந்திய அணி அந்த தொடரை இழக்க நேரிட்டது.

அதே போல பல போட்டிகளில் லக்ஸ்மன் தனது திறமையான துடுப்பாட்டாத்தினால் இந்திய அணியின் வெற்றிகளுக்கு வழி வகுத்தார். அவை எல்லாவற்றயும் பற்றி எழுதினால் பதிவு நீண்டு கொண்டே போகும் என்பதால் முக்கியமான சில இன்னிங்க்ஸ்களை பற்றி சொல்கின்றேன்.

2003/2004 பருவ காலத்தில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவாது போட்டியின் போது ராவிட்டுடன் இணைந்து 5 ஆவது விக்கெட்டுக்கு பெற்ற 303  ஓட்ட இணைப்பாட்டம் அந்த போட்டியில் இந்திய அணியை வெற்றி பெற வைத்தது. ஸ்கோர் விபரம்
அதே போல நான்காவது போட்டியில் சச்சின் உடன் இணைந்து 4 ஆவது விக்கெட்டுக்கு பெற்ற 356  ஓட்ட இணைப்பாட்டம் அந்த போட்டியையும் தொடரையும் சமப்படுத்த உதவி செய்தது.  ஸ்கோர் விபரம்

2004 ஆம் ஆண்டு பாக்கிஸ்தான் அணியுடன் அதன் சொந்த மண்ணில் இந்திய அணி ஒரு தொடரை விளையாடியது. முதலில் நடந்த நான்கு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் இரு அணிகளும் தலா இரு போட்டிகளில் வெற்றி பெற்று தொடர் சம நிலையில் இருந்தது. தொடரை தீர்மானிக்கும் ஐந்தாவது போட்டியில் லக்ஸ்மன் பெற்ற சதம் இந்திய அணி தொடரை வெற்றி பெற உதவியது ஸ்கோர் விபரம்

2007/2008 பருவ காலத்தில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின் போது லக்ஸ்மன் இரண்டாம் இன்னிங்க்ஸ் இல் பெற்ற 79 ஓட்டங்கள் இந்திய அணியின் வெற்றிக்கு வழி வகுத்ததுடன் மீண்டும் ஒரு தடவை அவுஸ்திரேலிய அணியின் தொடர் வெற்றிகளுக்கு (16 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து வெற்றி) முற்று புள்ளி வைக்கப்பட்டது. ஸ்கோர் விபரம்


2008/2009 பருவ காலத்தில் இந்தியாவில் நடைபெற்ற அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின் போது லக்ஸ்மன் இரட்டை சத்தினை அடித்து இருந்தார். ஸ்கோர் விபரம்  

2009/2010 பருவ காலத்தில் இந்தியாவில் நடைபெற்ற அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியின் போது இந்திய அணிக்கு வெற்றி பெற இரண்டாம் இன்னிங்க்ஸ் இல் 216 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ஒரு கட்டத்தில் 124 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து தோல்வியின் விளிம்பில் இருந்த இந்திய அணிக்கு லக்ஸ்மன் இறுதி துடுப்பாட்ட வீரர்களின் உதவியுடன் சிறப்பாகக ஆடி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவினார். இஷாந்த் சர்மாவுடன் 9 ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களையும் இறுதி விக்கெட்டுக்காக பிரக்ஜன் ஒஜாவுடன் 11 ஓட்டங்களையும் பெற்ற லக்ஸ்மன் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் 73 ஓட்டங்களை பெற்று வெற்றிக்கு வழி வகுத்து இருந்தார். ஸ்கோர் விபரம் 

இவ்வாறாக பல போட்டிகளில் லக்ஸ்மனின் பங்களிப்பு அபாரமானது. இப்படியாக கனவான் தன்மை கொண்ட திறமையான துடுப்பாட்ட வீரர் ஒருவரின் ஒய்வு நிச்சயம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு கவலை அளிப்பதாக தான் இருக்கும். எனினும் அவரது எதிர்காலம் வளமானதாக இருக்க உங்களுடன் சேர்ந்து நானும் வாழ்த்துகின்றேன் ஒரு கிரிக்கெட் ரசிகனாக.வி வி எஸ் லக்ஸ்மனின் மேலும் சில சாதனைகள் தளத்தில் உள்ளது. அவற்றை பார்வையிட இங்கே கிளிக்குங்கள்.


பிரெண்ட்ஸ்...எங்க போறீங்க...அப்படியே மறக்காமல் உங்கள் விமர்சனங்களையும் ஓட்டுகளையும் போட்டு விட்டு போங்க...நன்றி. 

1 comment:

K.s.s.Rajh said...

//// உண்மையிலே லக்ஸ்மனும் டிராவிட், சச்சின், கங்குலிக்கு இணையான சிறந்த துடுப்பாட்டவீரர் தான். ////

சரியாகச்சொன்னீர்கள் ஆனால் ஒரு நாள் போட்டிகளிலும் லக்ஸ்மனுக்கு தொடர்ந்து வாய்புக்கள் வழங்கப்பட்டு அவரும் அதில் சோபித்து இருந்தால் அவரது புகழ் இன்னும் ஓங்கியிருக்கும்

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் லக்ஸ்மனும் மறக்கப்பட முடியாத ஒரு வீரர்